நமது அஞ்சல் மூன்று மற்றும் GDS  மாநிலச் சங்கங்களின் போராட்டத்திற்கு  மேலும் கிடைத்து வரும்  வெற்றிகள் !
அன்புத் தோழர்களுக்கு இனிய வணக்கம் ! ஏற்கனவே  நம்முடைய  இரண்டு கட்ட போராட்டத்தின் விளைவாக  நாம் வைத்திட்ட கோரிக்கைகளில் 
1) நீண்ட 
காலமாக தேங்கிக் கிடந்த  நேரடி எழுத்தர் தேர்வு முடிவுகள் கடந்த 18.02.2015
 அன்றே அறிவிக்கப்பட்டன என்பதை  முதல் வெற்றியாக தெரிவித்திருந்தோம்.
2) இரண்டாவதாக  ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் சென்னை பெருநகரத்தில் தாம்பரம் , தி . நகர்( மத்திய கோட்டம் ) , அண்ணா நகர் 
(வட கோட்டம் ) , 
விருகம்பாக்கம் ( தென் கோட்டம் ) உள்ளிட்ட இடங்களில் நடப்பில் இருந்த 
 துரித அஞ்சல் பட்டுவாடா  உத்திரவு அடியோடு ரத்து செய்யப்பட்டது. இதனால் 
நம்முடைய அஞ்சல் மூன்று தோழர்கள்  விடுமுறை  தினங்களை முழுமையாக பெறலாம் 
என்பது மிகப் பெரிய வெற்றி. இதேபோல  தென் மண்டலத்திலும்  8 அஞ்சலகங்களில்  இந்த உத்திரவு அமலில் உள்ளது.  அதனையும் நிச்சயம் ரத்து செய்து உத்திரவு பெறுவோம் . 
3) மூன்றாவதாக 
 CIS ( McCAMISH )  பிரச்சினைகளை தீர்க்காமல்  கண்மூடித்தனமான  FURTHER 
 MIGRATION நிறுத்தப் படவேண்டும் என்று கோரியிருந்தோம். தற்போது கடந்த 
2.03.2015 இல் உத்திரவிடப்பட்ட 17 தலைமை அஞ்சலகங்களில் 8இல்  உடன் 
நிறுத்தச் சொல்லியும்  அடுத்த MIGRATION எதுவும் செய்திடாமல் உடன் 
நிறுத்திடவும்  உத்திரவிடப் பட்டுள்ளது.  இது நமது போராட்டத்திற்கு கிடைத்த
 வெற்றியாகும்.
4) நான்காவதாக 
 கண்மூடித்தனமாக ரூ. 10/- RD கணக்குகள் போடச் சொல்லுவது , போலி  RPLI 
 பாலிசிகள்  போடச் சொல்வதை உடன் நிறுத்தச் சொல்லியும் , "எந்தவித தவறான 
வழிகளையும் பிரயோகிக்கக் கூடாது அப்படிப் பிரயோகித்தால்  பொறுத்துக் 
கொள்ளமுடியாது " என்றும்  CPMG  தமிழ்நாடு அவர்கள்  உத்திரவிட்டுள்ளார் . 
இந்த உத்திரவு  பாதிக்கப்பட்ட  அப்பாவி  ஊழியர்களுக்கு, குறிப்பாக  GDS 
 ஊழியர்களுக்கு  மிகப்பெரும்  பாதுகாப்பினைத் தரும் . இந்த உத்திரவின் நகலை
 கீழே  பார்க்கலாம். இதையும் மீறி எந்த குட்டி அதிகாரியாவது  மிரட்டி போலி 
பாலிசி போடச் சொன்னாலோ  அல்லது  போலி RD ACCOUNT  குறைந்த DENOMINATION இல்
 நூற்றுக் கணக்கில் போடச் சொன்னாலோ அந்த அதிகாரியின் பெயர் குறிப்பிட்டு 
உடன்  மாநிலச் செயலர்களுக்கும்  பொதுச் செயலருக்கும் எழுத்து மூலம் புகார் 
அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.  அவர் மீது உடன்  CPMG , SECRETARY  POST
  மற்றும் FINANCE  MINISTRY  வரை  நாங்கள் புகார் செய்து மேல் நடவடிக்கை 
எடுக்க வைக்கிறோம் .
5) ஐந்தாவதாக , 
 தேர்வு செய்யப் பட்ட அனைத்து நேரடி எழுத்தர்களையும் உடனடியாக தாற்காலிக 
(PROVISIONAL ) பணி  நியமனம் செய்யுமாறு CPMG  அவர்கள்,   எழுத்தர் நியமன 
அடிப்படை சட்டவிதிகளை RELAX செய்து  உத்திரவிட்டுள்ளார்கள். அதாவது 
அவர்களிடம் இருந்து UNDER TAKING DECLARATION  பெற்றுக் கொண்டு 
 CERTIFICATE  VERIFICATION  செய்யாமலேயே , சாதிச் சான்று  VERIFICATION 
செய்யாமலேயே, MEDICAL  CERTIFICATE  பெறாமலேயே ,  POLICE  VERIFICATION 
 பெறாமலேயே  அவர்களுக்கு  தாற்காலிகப்  பணி  நியமனம் அளித்திடும் உத்திரவே 
 இது. ஏற்கனவே  நமது மத்திய சங்கத்தின் மூலம்  TRAINING  செல்லாமல் அனைத்து
 VERIFICATION  முடிக்கப்பட்டால் பணி  நியமனம்  அளிக்கலாம் என்ற உத்திரவை 
நாம் பெற்றிருந்தாலும்  தற்போது CPMG  , TN  அவர்கள் அளித்துள்ள  உத்திரவு 
 ஆட்பற்றாக்குறையை வெகுவாகத் தீர்த்திட  உதவும்,  உடனடி  நியமனத்திற்கான 
உத்திரவாகும். இது  நமது   தமிழ் மாநில  அஞ்சல் மூன்று  சங்கத்தின்  இரண்டு
 கட்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.  உத்திரவின் நகலை கீழே 
பார்க்கவும்.  இந்த செய்திகளை உடன் நகல் எடுத்து அனைத்து ஊழியர்களுக்கும்  
 அளிக்கவும்.
தொடர்ந்து 
 சுற்றிக்கை மூலமாகவும், SAVINGRAM  மூலமாகவும்,  தொடர் கடிதங்கள் 
மூலமாகவும்  அஞ்சல் மூன்று வலைத்தளத்தின் மூலமாகவும், அகில இந்திய 
சங்கத்திற்கு  இடைவிடாமல்  பிரச்சினைகளை எடுத்துச் செல்வதன் மூலமாகவும் 
 தமிழக அஞ்சல் மூன்று சங்கம்   நிர்வாகத்தின்  கவனத்திற்கு   பிரச்சினைகளை 
கொண்டு சென்ற போதும் தீர்க்கப்படாத  பிரச்சினைகள் , 
தற்போது 
 நூற்றுக் கணக்கான  ஊழியர்களின் ஒன்று பட்ட குரல் மூலம் ஓங்கி  ஒலிக்கத் 
துவங்கியவுடன்தான்  நிர்வாகத்தின் காதுகளுக்கு நம் பிரச்சினைகள் 
செல்லத்துவங்கியுள்ளன. இப்போதாவது கேட்கத் துவங்கியுள்ளதே  என்று  சற்று 
 நிம்மதி அடைகிறோம். ஆனாலும் நம்முடைய பெரும்பகுதி பிரச்சினைகள்  இன்னமும் 
தீரவில்லை. இது தொடக்கமே !
LSG 
 பிரச்சினையில்  மாநில நிர்வாகம் கேட்டிருந்த விளக்கம்  DTE  மூலம் 
அனுப்பப் பட்டுள்ளதாகவும்  உடன் இந்தப் பிரச்சினை தீர்க்கப்படும் என்று 
நம்முடைய அஞ்சல் 
மூன்றின் பொதுச் செயலர் தோழர். N .S . அவர்கள் இன்று தொலைபேசியில் 
தெரிவித்தார்.   இது குறித்து நாளை  மாநில நிர்வாகத்திடம் பேசிட உள்ளோம். 
மூன்று ஆண்டுகளாக 
 அளிக்கப் படாத  LSG  பதவி  உயர்வு உடன் அளிக்கப் பட வேண்டும்  என்பதும் 
அதுவும்   நிர்வாகத்தின் காலதாமதம் என்பதால்  NOTIONAL  ஆக  அளிக்கப்பட 
வேண்டும் என்பதும்  நமது கோரிக்கை.HSGI
  அலுவலகங்களுக்கு   பணித்  தகுதி உள்ள ஊழியர்கள் இல்லை யென்றால்  REVISED 
 HSG  I  பணி  நியமன விதிகளின்படி  HSG  I  பதவிகளை DOWNGRADE செய்யாமலேயே  
 உரிய ஊழியரைக் கொண்டு  HSG  II LEVEL  இல்  OPERATE  செய்திட வேண்டும் 
என்பதாகும். அப்படிச் செய்தால் எல்லா  HSG  I  பதவிகளும்   உடன் 
நிரப்பப்படும். இதனை  மாநில அஞ்சல் நிர்வாகம்  கருத்தில் கொண்டு உடன் 
உத்திரவு இட வேண்டுகிறோம்.
நாளை (05.03.2015) 
மாலை   தமிழக NFPE    COC  யின் கூட்டம்  எழும்பூர் RMS  மனமகிழ் 
மன்றத்தில் நடைபெற  உள்ளது  அதில் நிச்சயம் இணைந்த போராட்டத்திற்கு  முடிவு
  எடுக்கப்படுமென்று   நம்புகிறோம் .  தேங்கிக் கிடக்கும் பிரச்சினைகளைத் 
தீர்த்திட  போராட்டம் தான்  வழி என்று நிர்வாகம் நம்மை தள்ளியுள்ளது.   
போராட்டத்திற்குப் பின்னர்தான்  இந்த தீர்வுகள் கிடைக்கத் துவங்கியுள்ளன  !
    
தீர்மானித்தபடி 
அடுத்த கட்டத்தை நோக்கி  ஒன்றுபட்டு  இயக்கத்தை எடுத்துச் செல்வதில் அஞ்சல்
 மூன்று  சங்கம்  முன்கை  எடுத்து  நிச்சயம்  செயல்படும். ஒற்றுமையே 
 வெற்றி !
        வாழ்க  NFPE  !  வளர்க  நம்   ஒற்றுமை !  வெல்க நம் போராட்டம் !
                                                          தோழமையுடன் 
 J . இராமமூர்த்தி,                                                                                              R . தனராஜ் ,
மாநிலச் செயலர், அஞ்சல் மூன்று                                மாநிலச் செயலர் , GDS 
TARGET /TORTURE  குறித்த உத்திரவு !
நேரடி எழுத்தர் நியமனம் செய்திட உத்திரவு 
DECLARATION  சாரம் 
and
I have been made known that this PROVISIONAL appointment order issued to me and
my deputation to training/appointment  is
subject to satisfactory verification of my age proof , educational certificates
, community certificate, Discharge certificate/ medical certificate etc and
other verifications as prescribed by Departmental rules and it is liable to be
cancelled at any time if any of the document /information furnished by me is
found not genuine /I was not eligible for selection to the post of Postal
Assistant /Sorting Assistant for any reason.
b)
I ……………………… hereby declare that no Criminal/Police case is registered against
me in any police station.
c)
I ……………… being  physically handicapped understand
that my selection is liable to be cancelled if it is found later on medical
examination by the Competent authority that I do not come under the category of
physically handicapped as defined in the relevant order.
d)
I …………… belong to the ………………. Community which is recognized as                                 by the
Government of India for the purpose of reservation in service in the relevant
orders.
 


 
No comments:
Post a Comment