கடந்த 15.08.2015அன்று தென் சென்னை
கோட்ட அஞ்சல் மூன்று சங்கத்தின் ஈராண்டு மாநாடு, புனித தாமஸ் தலைமை அஞ்சலக
வளாகத்தில் அதன் பொறுப்புத் தலைவர் தோழர். R .கனகவேல் தலைமையில்
சிறப்பாக நடைபெற்றது.
மாநாட்டில், சுதந்திரப் போராட்டத் தியாகியும் பொதுவுடைமை இயக்கத்தின் முதுபெரும் தலைவருமான தோழர். R . நல்லகண்ணு அவர்கள் கலந்து கொண்டு சிறப்புச் சொற்பொழிவு ஆற்றியது சிறப்பான அம்சமாகும்.
மேலும் அஞ்சல் மூன்று அகில இந்திய
சங்கத்தின் தலைவரும் மாநிலச் செயலருமான தோழர். J . இராமமூர்த்தி , மாநிலச்
சங்கத்தின் தலைவர் தோழர். J . ஸ்ரீ வெங்கடேஷ் , அகில இந்திய சங்கத்தின்
உதவிப் பொதுச் செயலரும் , மாநில நிதிச் செயலருமான தோழர். A . வீரமணி ,
மாநிலச் சங்கத்தின் உதவித் தலைவர் தோழர். V . வெங்கட்ராமன் ,அஞ்சல் மூன்று
மாநிலச் சங்கத்தின் முன்னாள் உதவிச் செயலர் தோழர். C
கருணாகரன், AIPEU GDS NFPE சங்கத்தின் அகில இந்திய துணைப்பொதுச்
செயலரும் , தமிழ் மாநிலச் செயலருமான தோழர் . R . தனராஜ், அஞ்சல் நான்கின்
மாநில நிதிச் செயலர் தோழர். S . இரவிச்சந்திரன்,
அஞ்சல்
மூன்று கோட்டச் செயலர் தோழர் D. இரவி,
வட சென்னை அஞ்சல் மூன்று கோட்டச்
செயலர் தோழர். ஏஞ்சல் சத்தியநாதன்
உள்ளிட்ட தோழர்கள் கலந்துகொண்டு
சிறப்பித்தார்கள்.
மாநாட்டில் கீழ்க் கண்ட நிர்வாகிகள்
ஏகமனதாக தேர்ந்தெடுக்கப் பட்டார்கள் . புதிய நிர்வாகிகளின் பணி சிறக்க
அன்பான வாழ்த்துக்கள் !
தலைவர் : தோழர். R . கனகவேல்
கோட்டச் செயலர் : தோழர். N . ராஜேந்திரன்
கோட்ட நிதிச் செயலர் : தோழர். T. இரவிக்குமார்
No comments:
Post a Comment