Saturday, 31 January 2015
Friday, 30 January 2015
போராட்டக் களம் நோக்கி தமிழக அஞ்சல் மூன்று மற்றும் GDS சங்கம் !
போராட்டக் களம் நோக்கி தமிழக அஞ்சல் மூன்று மற்றும் GDS சங்கம் !
26.01.2015 SRMU சங்க கட்டிடம் திருச்சி
திருச்சியில் ஒரு திருப்பு முனை !
தமிழக அஞ்சல் மூன்று மற்றும் NFPE GDS சங்கங்களின்
மாநில அளவிலான கோட்ட/ கிளைச் செயலர்கள் கூட்டம் !
மூன்று கட்ட போராட்டம் !
முதற் கட்டம் கோட்ட/ கிளைகளில்
கோரிக்கை மனு அளித்து ஆர்ப்பாட்டம் !
இரண்டாவது கட்டம்
மண்டல மாநில அளவில் தொடர் முழக்கப் போராட்டம் !
மூன்றாவது கட்டம்
மாநிலம் தழுவிய ஒரு நாள் வேலை நிறுத்தம் !
தமிழக அஞ்சல் நிர்வாகமே !
CBS /CIS அதிரடி MIGRATION என்ற பெயரில் ஊழியர்களை
கொடுமைப் படுத்தாதே !
CBS /CIS குளறுபடிகளுக்கு உடனடி தீர்வு கொடு !
பொது மக்களிடம் ஊழியர்களை அசிங்கப்படுத்தாதே !
TARGET என்ற பெயரில் எந்தவித அடிப்படை
வசதியும் செய்து கொடுக்காமல் INDOOR ஊழியர்கள்
மற்றும் GDS ஊழியர்களை கொடுமைப் படுத்தாதே !
EPOST என்ற பெயரில் சினிமா நடிகைகளுக்கும்
அரசியல் வாதிகளுக்கும் காவடி தூக்கும், இலாக்காவை
அசிங்கப்படுத்தும் அதிகாரிகள் மீது ஒழுங்கு
நடவடிக்கை எடு !
ஆட்பற்றாக்குறையை உடனே நீக்கு !
SANCTIONED STRENGTH மற்றும் WORKING STRENGTH க்கு இடையிலான காலிப் பணியிடங்களை உடனே நிரப்பு !
IRREGULAR ASSESSMENT செய்த அதிகாரிகள் மீது
ஒழுங்கு நடவடிக்கை எடு !
ஆட்பற்றாக்குறைக்கு உடனே OUTSOURCING வழங்கிடு !
OUTSOURSING வழங்கவில்லையானால் OUTSOURSED வேலைகளை
ஊழியர்கள் புறக்கணிப்போம் என்ற முடிவுக்கு தள்ளாதே !
ஞாயிறு மற்றும் பண்டிகை தினங்களில்
ஊழியர்களை பணிக்கு உத்திரவிடாதே !
MEETTING /MELA /TRAINING போடாதே !
ஊழியர் அடிப்படை உரிமையை பறிக்காதே !
24 X 7 என்று MNC COMPANY போல அடிப்படை விதிகளை மீறி
அஞ்சல் பகுதியில் 'கோமாளி' உத்திரவுகளை போடும்
அதிகாரிகளை கட்டுப்படுத்து !
CPMG யுடனான எழுத்துபூர்வமான ஒப்பந்தந்தத்தை மீறி வயதானவர்களை கட்டாய 'SHRAMDHAN' உத்திரவிடும்
PTC இயக்குனர் மீது நடவடிக்கை எடு !
தோழர். ஜெயக்குமார் சாவு போல
'இன்னொரு சாவு' ஏற்படுத்தாதே !
எழுத்தர் தேர்வு முடிவுகளை ஆண்டுக்கணக்கில்
தாமதப்படுத்தும் நிர்வாகத்தின் தூக்கத்தை கலைத்திடு !
தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிடு !
ஊழியர்களை பணிக்கு அமர்த்து !
பழுது பட்ட, காலாவதியான கணினி மற்றும்
அதன் உபபொருட்களான PRINTER , UPS, BATTERY ,
GENERATOR களை உடனே மாற்று !
லட்சக் கணக்கில் செலவு செய்து கட்டிடங்களை அழகு படுத்தாதே !
அடிப்படை கட்டுமானங்களை வழங்கு !
வேலை செய்யாத ATM களுக்கு
லட்சக்கணக்கில் தினம் தினம் கட்டிடமா ?
வேலை செய்யும் ஊழியர்களுக்கு SCANNER கூட இல்லையா ?
PRINT எடுக்க PAPER கூட இல்லையா ?
BARCODE STICKER கூட இல்லையா ?
இதற்கெல்லாம் பணம் அடியோடு இல்லவே இல்லையா ?
மூன்று ஆண்டுகளாய் தேங்கிக் கிடக்கும்
LSG பதவி உயர்வு என்னாச்சு ?
REVISED RECTT . RULES அடிப்படையில்
HSG II, HSG I பதவி உயர்வு என்னாச்சு ?
தொழிற்சங்க நடவடிக்ககளுக்காக பழிவாங்கும்
தென் மண்டல நிர்வாகத்தை கட்டுப் படுத்து !
தொழிற்சங்க நடவடிக்கைகளுக்காக சட்டத்தை மீறி
வழங்கப் பட்ட தண்டனைகளை ரத்து செய் !
சட்டத்தை குப்பையில் போடும் திண்டுக்கல்
கோட்ட அதிகாரியின் கொட்டத்தை அடக்கு !
ஊழல் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடு !
இடமாற்றம் மட்டும் செய்யாதே !
ஆள் இல்லாத நேரத்தில் ஆள் நிரப்பும்
கூடங்களாக பயிற்சி மையங்களா ?
கண்மூடித்தனமான WCTC பயிற்சிகளை உடனே நிறுத்து !
CBS அசுர வேகம் ! SANCHAY POST TRAININGம் அசுர வேகம் !
ஏன் இந்த முரண்பாடு ! தேவையற்ற SANCHAY POST TRAINING ஐ
உடனே நிறுத்து !
கணினி உபகரணங்களுக்கு AMC உடனே அறிவி !
கண்மூடித்தனமாக STAMP VENDOR பதவிகளை ஒழிக்காதே !
COUNTER இல் பணிபுரியும் ஊழியர்களை
மேலும் மேலும் கொடுமைப் படுத்தாதே !
பொது மக்கள் உபயோகத்திற்கு ரூ. 4/- ரூ. 5/
DENOMINATION STAMP உடனே வழங்கு !
CARD , COVER , ACK CARD , RPLI RECEIPT BOOK, PASS BOOK,
PAY IN SLIP , B .O .DAILY ACCOUNT உள்ளிட்ட அத்தியாவசிய
பொருட்களை உடனே வழங்கு !
மாதாந்திரப் பேட்டிகளை நடத்திடாத
கோட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடு !
மற்றும் தேங்கிக் கிடக்கும் கோட்ட அளவிலான
பிரச்சினைகளை உடனே தீர்த்து வை !
கோட்ட/ கிளைச்
செயலர்கள் கூட்டத்தில் பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை சரி செய்து MEMORANDAM
தயார் செய்யும் பணியில் மாநிலச் சங்கம் ஈடுபட்டுள்ளது . கூட்டத்திற்கு வர
இயலாத கோட்ட/ கிளைச் செயலர்கள் உடன் தங்கள் பகுதிப் பிரச்சினைகளை
மாநிலச் செயலருக்கு EMAIL மூலம் அனுப்பிட கேட்டுக் கொள்கிறோம்.
பிப்ரவரி முதல் வாரத்தில் முதற் கட்ட போராட்டம் அறிவிக்கப்படும் !
கோட்ட/ கிளைச் செயலர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டுகிறோம்.! இரண்டாவது
கட்ட போராட்டத்தில் வேலைநிறுத்த அறிவிப்பு மற்றும் சட்ட பூர்வமான
நோட்டீஸ் வழங்கப்படும் !
இது நம் உரிமை காக்கும் போராட்டம் !
நம் உணர்வுக்கான போராட்டம் !
போராட்ட உணர்வு பெருகட்டும் !
போராட்டத் தீ பரவட்டும் !
Wednesday, 28 January 2015
Saturday, 24 January 2015
Opening of new SS Account and Acceptance of Subsequent Deposit in Finacle
Workaround (interim process) for SSA
Scheme.
1. SSA Account Opening and Subsequent Deposit.
1. If Guardian is not having CIF in Finacle, a new CIF has to be
created for the guardian.
2. For opening of account in the name of Minor, a new CIF (if not
already exists) in the name of girl child has to be opened. User has to be sure
that Birth Certificate of minor is
given and date of birth of minor should not be earlier than 2.12.2003 as system will not validate
this date.
3. For opening of account use Menu – CPPFAO
4. CIF ID of minor is to be entered in CIF ID field.
5.
In Scheme Code field, if PPF is appeared, it is to be deleted and
SSA has to be entered and if the field is blank, SSA is to be entered. This is mandatory and needs
to be done very carefully.
6.
After opening of account, account number has to be noted down on the
Pay-in -Slip and Supervisor will use same menu
CPPFAO (Verify option) and enter the account number as written on the
Pay-In-Slip. Please do not search account number from searcher.
7.
After verification, Account will be ready for funding. User will use CTM for entering first deposit. Please ensure that
first deposit should not be less than Rs.1000/- and if amount tendered is more
than Rs.1000/- it should be in multiple of Rs.100/- as system will not validate
this amount.
8.
Supervisor should verify in CTM and ensure that amount entered in
not less than Rs.1000/-.
9.
If First Page of Passbook is not getting printed by the Finacle, it
can be prepared manually but transaction page will
be get printed from Finacle.
10.
At the close of the counter hours, List Of Transactions has to be
prepared manually for SSA and Consolidation is also to be prepared manually.
11.
Total Deposit in SSA should be entered in SB Cash which will be
uploaded in Cash Book.
12.
A register of account opened under SSA is to be maintained in
manuscript showing Sl.No.(in continuation), Date of opening, Account Number, amount of deposit.
13.
Subsequent deposit can also be accepted through CTM by following
same procedure as mentioned for funding of account.
14.
While doing subsequent
deposit, User and
Supervisor has to ensure that subsequent deposit should be in multiple of
Rs.100/- and total deposits in the account should not exceed Rs.1,50,000/- in a
Financial Year as system will not validate these rules.
15.
NO WITHDRAWAIS ALLOWED IN
THIS ACCOUNT. THEREFORE, USER AND SUPERVISOR SHOULD NOT ALLOW ANY WITHDRAWAL.
16.
USER AND SUPERVISOR SHOULD
ENSURE THAT KYC DOCUMENTS AND BIRTH CERTIFICATE OF MINOR GIRL ARE TAKEN FROM
THE GUARDIAN.
17.
USER AND SUPERVISOR SHOULD
ENSURE THAT ONLY ONE ACCOUNT IS OPENED IN THE NAME OF SAME GIRL CHILD AND ONE
GUARDIAN CAN OPEN ONLY TWO SSACCOUNTS.
18.
AOF and KYC DOCUMENTS With
BIRTH CERTIFICATE SHOULD BE PRESERVED IN SEPARATE GUARD FILE AND SHOULD NOT BE
SENT TO CPC TILL FURTHER ORDERS.
SB Order 02/2015 : Introduction of new scheme "Sukanya Samriddhi Account" under Small Savings Scheme from 22.01.2015.
Sukanya Samruddhi Account
Under the scheme, the account can be
opened from the birth of the girl child till she attains the age of 10. A
girl child who attained the age of 10 years, one year prior to
notification, will also be eligible. The account can be opened by an
amount of Rs 1,000 and in a financial year investment ceiling is Rs 1.5
lakh. The child can close the account earliest at the age of 21 years
with option of keeping the account till marriage.
For the current financial year, this
would work out to 9.1%. For the sake of simplicity, the manner of
interest calculation would be similar to public provident fund (PPF).


Non-payment of income tax may soon become prosecutable under Prevention of Money Laundering Act
The government may prosecute those accused of evading taxes under the
Prevention of Money Laundering Act (PMLA) as part of a wide ranging
crackdown on black money. Further, non-declaration of foreign bank
accounts and assets may also be made a criminal offence, according to
people who have been briefed on the thinking within the tax authorities
and the finance ministry.
Failure to pay income tax could become prosecutable under anti-money
laundering laws if the amount evaded exceeds Rs 50 lakh, according to a
person aware of the deliberations.
Under laws currently in place, neglecting to pay income tax is a
compoundable offence, that is, offenders can end proceedings by paying a
penalty.
Failing to pay service tax, in certain specific situations, and excise duty are criminal offences even now.
Such acts could be added to the list of offences to which PMLA is applicable, known as 'predicate offences'.
The apex bodies in charge of direct and indirect taxes, the Central
Board of Direct Taxes (CBDT) and Central Board of Excise and Customs
(CBEC), have held initial consultations to identify offences and define a
threshold of evasion beyond which PMLA could be brought into play.
Some of these measures could be part of the forthcoming Budget, some
of the people cited earlier said. But a final decision would be taken
only after a detailed analysis of the possible impact of such steps on
the fragile investment sentiment which the Modi administration is
endeavouring to improve, said a government official privy to the
development.
"There have been some discussions... We are examining as to what
could be adequate threshold for these offences," said the official.
Concealment of income, non-disclosure of foreign assets including
bank accounts, giving false evidence and non-deposit of tax deducted at
source are some of the offences that could make it to the list of crimes
that could become a predicate offence under PMLA.
"Making tax evasion an offence liable to prosecution is conceptually
sound but caution needs to be exercised to ensure that these provisions
are not misused," said Pratik Jain, Partner, KPMG.
The government faces pressure from the Opposition as well as the
judiciary to demonstrate effective measures to tackle black money. The
Special Investigation Team on black money headed by Justice MB Shah has
suggesting designating income-tax evasion as a criminal offence.
As far as indirect taxes are concerned, clandestine removal and
misdeclaration of goods, under-invoicing, availing credit by resorting
to fraud, collecting service tax and excise duty but not depositing it
with the government and other offences that invite prosecution could
make it to the list of predicate offences. Customs offences such as over
and under-invoicing of goods are already in the ambit of anti-money
laundering law.
During the 2014 election campaign, Modi, as BJP's PM candidate, had
made the alleged prevalence of a vast quantum of black money --
particular fund kept abroad - part of a narrative of massive corruption
supposedly tolerated or even encouraged by the previous government. Modi
had also promised vigorous steps to retrieve black money.
"It (applying PMLA to tax evasion) would have to be a political
call," said another official adding that all aspects need to be weighed,
especially the possible impact on investment.
India, which is a member of the Financial Action Task Force, is
obliged to designate these offences as tax crimes and bring them under
the ambit of its antimoney laundering law in line with the latest global
standard prescribed by an inter-governmental body founded by the G7
countries to develop policies to combat money laundering and terror
financing.
The global plan to bring income-tax offences under the anti-money laundering law was unveiled in February 2012.
Many countries have already incorporated such offences in their money
laundering laws. The new government had discussed these proposals ahead
of its first budget in July but was not keen to take them up in a hurry
as there was little time for detailed discussion.
If these offences become scheduled offences under the anti-money
laundering law, they will attract rigorous imprisonment of three to
seven years and a fine of up to Rs 5 lakh. Usually, trial is also faster
as offences under PMLA are tried in special courts and the onus to
prove innocence lies on the accused.
At present launching prosecution for tax offences is a cumbersome
process and bringing it under the PMLA could give tax authorities powers
to combat black money.
Source : The Economic Times
Discontinuation of Central Recruitment Fee (CRF) Stamps
To view Department of Posts (PO Division) OM No.6-4/2006-PO(Pt) dated 23-01-2015 please Click Here.
டெலி ஷாப்பிங் மால் மற்றும் பலசரக்கு கடையாகுமா அஞ்சல் துறை ?
டெலி ஷாப்பிங் மால் மற்றும்
பலசரக்கு கடையாகுமா அஞ்சல் துறை ?
CORPORATISATION திட்டம் அமலாவதற்கு
முன்னரே வியாபாரம் சூடு பிடிக்கிறதா ?
வியாபார அபிவிருத்தி செய்ய ஒவ்வொரு
ஊழியரும் 'EPOST புடிப்பது போல'
சம்பளத்தில் முந்திரிக்கொட்டை,
மிளகு,சீரகம், பட்டை, லவங்கம்
இனி வாங்க வேண்டும் என்பார்களா ?
ஊழியரும் 'EPOST புடிப்பது போல'
சம்பளத்தில் முந்திரிக்கொட்டை,
மிளகு,சீரகம், பட்டை, லவங்கம்
இனி வாங்க வேண்டும் என்பார்களா ?
THE HINDU, JAN. 24, 2015
The
Department of Posts has set its eyes on joining the e-commerce
bandwagon, with an e-commerce portal of its own in the pipeline.
Addressing a
press conference here on Wednesday, John Samuel, member, Postal Services
Board, said the department had signed agreements with major e-commerce
sites such as Flipkart, Amazon, and Snapdeal for e-commerce consignments
across the country. The
department’s own e-commerce portal would be launched shortly, through
which products from local communities could be marketed through the post
office network. Agreements
were being signed with the Cashew Board and the Spices Board to sell
their products via the postal network as well, Mr. Samuel said. The department, he said, was eyeing a 20 per cent jump in revenue through the foray into e-commerce.
Infrastructure for this initiative, apart from the network of 1.55
lakh post offices across the country, was being set up with e-commerce
portal warehousing centres, parcel picking centres, parcel processing
centres, and transport systems.
An investment of Rs.4,909 crore was being made during the current
Five Year Plan for the India Post IT project, which would see
computerisation and networking of all the 1.55 lakh post offices.
Special focus was being given to Core Banking Solutions for Post Office Savings Bank operations.
Wednesday, 21 January 2015
Monday, 12 January 2015
பொங்கல் பண்டிகை காலத்தில் பயிற்சி வகுப்புகள் ரத்து !
அன்புத் தோழர்களுக்கு வணக்கம் !
பொங்கல் திருநாளை
உள்ளடக்கி ;அஞ்சல் பயிற்சி வகுப்புகள் சென்னை பெருநகர மண்டலத்தில் ,
பாண்டிச்சேரியிலும் , மேற்கு மண்டலத்தில் கோவையிலும் உத்திரவு
இடப்பட்டிருந்தது .
பயிற்சி
வகுப்புகளுக்கு பணிக்கப்பட்டிருந்த நம்முடைய தோழர்/ தோழியர்கள் பொங்கல்
திருநாளை தங்கள் இல்லத்தில் குடும்பத்துடன் கொண்டாடிட இயலாது
என்பதையும், மேலும் திருநாளை ஒட்டி பணிப் பயிற்சி நகரங்களில் உணவுச்
சாலைகள் மூடப்பட்டு அவர்கள் அவதியுறுவார்கள் என்பதையும் சுட்டிக்காட்டி,
நேற்றைய தினம் சென்னை பெருநகர PMG அவர்களிடம் நம்முடைய மாநிலச் செயலர்
கடிதம் அளித்துப் பேசினார்.
அதேபோல நேற்று
மாலை நம்முடைய மேற்கு மண்டலச் செயலர் தோழர். C . சஞ்சீவி அவர்கள் PMG,
WR அவர்களுக்கு EMAIL மூலம் கடிதம் அளித்திருந்தார். தொடர்ந்து இன்று
நிர்வாக அலுவலகங்களுக்கு விடுமுறை தினமானபோதிலும் நம்முடை மாநிலச் செயலர்
நம்முடைய PMG CCR அவர்களைத் தொடர்பு கொண்டு பயிற்சி வகுப்பினை ரத்து
செய்திட நினைவூட்டினார். அதேபோல மேற்கு மண்டலச் செயலரும் PMG WR
அவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்த பயிற்சி வகுப்பினை
ரத்து செய்திடக் கோரினார்.
நம்முடைய மாநில
மற்றும் மண்டலச் செயலர்களின் கோரிக்கைகளை ஏற்று இரண்டு மண்டலங்களிலும்
பொங்கல் பண்டிகை காலத்தில் உத்திரவிடப்பட்டிருந்த பயிற்சி வகுப்புகள்
இன்று ரத்து செய்யப் பட்டு உத்திரவிடப்பட்டன .
விடுமுறை
நாளானபோதிலும் நம்முடைய கோரிக்கையை ஏற்று இன்றைய தேதியில் உத்திரவிட்ட
PMG CCR மற்றும் PMG WR ஆகிய இருவருக்கும் நம் மாநிலச் சங்கத்தின்
நன்றியை ஊழியர்கள் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்.
விடுமுறை
தினத்திலும் மேற்கு மண்டல PMG ஐ தொடர்பு கொண்டு இந்த பயிற்சி வகுப்பினை
ரத்து செய்திட விரைந்து செயல்பட்ட நம்முடைய மேற்கு மண்டலச் செயலர்
தோழர். C . சஞ்சீவி அவர்களுக்கு மாநிலச் செயலரின் பாராட்டுக்கள் !
வாழ்த்துக்கள் !
Wednesday, 7 January 2015
Task Force Committee Report
Task Force Committee Report
Lay Out Plan of Privatization of Department of Posts
A
high power committee named as Task Force on leveraging the Post Office
Network headed by Shri T.S.R. Subramaian Ex. Cabinet Secretary
consisting 8 other members having expertise in other fields was
appointed by Prime Minister of India. The main object of this Committee
was stated to study and make recommendations regarding leveraging the
Post Office Network in India and bring it in line with changing market
trends and the emerging competition with focus on mail and parcel
services particularly in rural areas upgrading of infrastructure and
technology incorporating the best global practices available as also by
introducing new services and participation of multiple players and to
make the Department of Post financially viable.
When
Task Force Committee was appointed many of our Comrades were presuming
that Good Days (Achchhe Din) of Postal Department are likely to come.
But it was a question before us that when Govt. is attacking all
sectors like Railways, Defence, Public Sector Banks, LIC & BSNL etc.
Why alone Postal Department will get good days only.
NFPE
leaders also met with Chairman of Task Force and during the course
of discussion he told that Postal Department will be benefited by the
recommendations of Task Force and more jobs will be generated and there
will be no adverse impact on staff.
But
when the report was published it was clearly an indication of Govt’s
hidden agenda to corporatize the main functions of Department of Posts.
Accordingly to the report the Deptt. Of Posts will be divided in to six
units. i.e.
(i) Banking and financial services
(ii) Insurance (PLI/RPLI),
(iii) Distribution of third party products (Services on behalf of private parties on payment basis),
(iv) Management of Govt. services
(v) Parcel & Packets and
(vi) Communication delivery
First
five units are designated as strategic Business units and sixth unit
will deliver mails at subsidized rates. Under Deptt. Of Posts a Holding
Company “India Post (Financial and other services) Corporation ” will be
formed. The Corporation will consist Board of Members and one Chairman
from the Board Members.
All
the five separate subsidiary Companies will also have separate Boards.
In the course of time Govt. may disinvest of its part of Holding and
new Corporation will raise fund from share market and thereafter will
also be listed in share market in future.
It is stated in the report that five subsidiary Companies will make profit and contribute to meet the loss of sixth unit.
The
Task Force Committee has also recommended for amendment of Indian Post
Office Act 1898 and to bring another Postal Act. “India Post (Financial
and other services)” Corporation Act" for reorganization of Deptt. of
Posts by creating new Corporate Structure.
Based
on the above facts it is crystal clear that the recommendations of Task
Force are a layout plan for corporatization and privatization,
thereafter just like happened with Telecom Deptt.
So
this is the first and foremost duty of every Postal employee to oppose
this dangerous and retrograde move of Govt. of India to Corporatize and
privatize the Deptt. of Post and defeat it. Entire employees should come
under one banner of JCA and oppose unitedly this Task Force Committee
report. Our slogan should be -
“Save Postal and save India Post”
If
we allow NDA Govt. to corporatize the functions of the Deptt. of Posts,
it will be the beginning of end of Govt. run Postal Services in India.
The decision of Postal Joint Council of Action (NFPE, FNPO, AIPEU GDS
(NFPE) and NUGDS) to go on indefinite strike from 6th May 2015 should
also be strengthened further by adding the demand in the Charter of
Demands.
“No Corporatization in Postal Services”
So we should be ready for a do and die battle.
Tuesday, 6 January 2015
Friday, 2 January 2015
தி. நகர், மயிலாப்பூர் உள்ளிட்ட பல அலுவலகங்களிலும் மொத்தம் ரூ. 43,54,035.00 க்கு 'WRITE OFF' செய்திட உத்திரவு
அன்புத் தோழர்களுக்கு இனிய வணக்கம் .
மத்திய சென்னை , தென் சென்னை , தாம்பரம் உள்ளிட்ட சென்னை பெருநகர மண்டலம் சார்ந்த கோட்டங்களில் MINUS BALANCE பிரச்சினையில் பல தோழர்கள்/தோழியர்கள் பாதிக்கப்பட்டு பல ஆயிரக்கணக்கான ரூபாய் ஊதியப் பிடித்தம் செய்திட உத்திரவிட்டதை எதிர்த்து நம்முடைய மாநிலச் சங்கத்தின் சார்பில் பிரச்சினையை பலமுறை PMG, CCR மற்றும் CPMG அவர்களிடம் கொண்டு சென்றது குறித்து இந்த வலைத்தளத்தில் ஏற்கனவே நாம் பிரசுரித்திருந்தோம்.
கடந்த 28.2.2014 இல் இது குறித்து, சட்ட விதிகளைச் சுட்டிக் காட்டி ஒரு நீண்ட கடிதத்தை அளித்து PMG, CCR அவர்களிடம் பேசிய விபரமும் , அதற்கு இறுதியாக அவர், சட்ட விதிகளுக்கு மாறான, பிரச்சினைக்கு உள்ளான MINUS BALANCE CASE களை பரிசீலித்து 'WRITE OFF' செய்திட பரிந்துரைப்பதாக உறுதி அளித்ததையும் தெரிவித்திருந்தோம்.
அதன் அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டு தற்போது CCR மண்டலத்தில் மொத்தம் ரூ. 43,54,035.00 க்கு 'WRITE OFF' செய்திட உத்திரவு பெறப்பட்டு அது செயலாக்கப்பட்டும் வருகிறது. குறிப்பாக சென்னை மத்திய கோட்டத்தில் தி. நகர், மயிலாப்பூர் உள்ளிட்ட பல அலுவலகங்களிலும், தென் சென்னை கோட்டத்தில் ST . THOMAS MOUNT , MADIPPAAKKAM , NANGANALLUR உள்ளிட்ட பல அலுவலகங்களிலும் தாம்பரம் அம்பத்தூர் HO உள்ளிட்ட பல அலுவலகங்களிலும் இந்த உத்திரவு அமலாகிறது.
இது குறித்து நமது மாநிலச் செயலரிடம் ஏற்கனவே நமது PMG , CCR அவர்கள் தெரிவித்தபடி, நம் கோரிக்கைக்கு வந்த பதிலை கீழே உங்கள் பார்வைக்கு அளிக்கிறோம்.
இப்படி பெரிய அளவில் 'WRITE OFF' பெறுவது இதுவே முதன் முறையாகும்.நம் கோரிக்கையை ஏற்று அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு ரூ.43.5 லட்சம் 'WRITE OFF' பெற்றுத் தந்த நமது சென்னை பெருநகர மண்டல PMG திரு. மெர்வின் அலெக்சாண்டர் அவர்களுக்கு நம் ஊழியர்கள் சார்பாக மாநிலச் சங்கத்தின் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் இருமாதங்களுக்கு ஒரு முறையிலான பேட்டியில் நம்மிடம் உறுதி அளித்தபடி நீண்ட நாள் பிரச்சினையான திருவண்ணாமலை , ஆரணி தலைமை அஞ்சலகப் பகுதிகளுக்கு புதிதாக 15 பிரிண்டர்கள் வாங்கிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறித்தும் நம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
புத்தாண்டில் ஒரு சராசரி ஊழியனின் பார்வை !
அன்புத் தோழர்களுக்கு ! வணக்கம் ! நம்முடைய இலாக்கா முதல்வர் அவர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துச் செய்தியுடன் 2014 இல் நம்முடைய கடின உழைப்புக்கான பாராட்டினையும் தெரிவித் துள்ளார்கள் ! அவர்களுக்கு நம் அனைவரின் சார்பில் நம்முடைய நன்றி உரித்தாகட்டும் !
நடப்பு ஆண்டில் நம் இலாக்காவின் வளர்ச்சி, அதற்கான இலக்கு நிர்ணயம் அதன் தேவைகள் குறித்தும் , மாறி வரும் சந்தைத் தேவைகளுக்கு ஏற்பவும் , புதிய வணிக வாய்ப்புகளுக்கு ஏற்பவும் நம்முடைய திறமைகளை மேம்படுத்திக் கொள்ளவேண்டியிருப்பது குறித்தும் தெரிவித்துள்ளார்கள்.
இலாக்காவின் ஊழியர்கள் என்ற வகையில், நம்முடைய இலாக்காவின் வளர்ச்சியில் நம் எல்லோருக்கும் நிச்சயம் அதற்கான கடமை உள்ளது. மிக அதிக அளவில் நம் பங்கும் அதில் உள்ளது. நம் இலாக்காவே நம் அனைவரின் வாழ்வாதாரம் . நிச்சயம் அந்த திசை நோக்கி நாம் செயல்படுவோம் என்று உறுதி கூறுகிறோம்.
ஆனால் அதற்கான அடிப்படை தேவைகள் குறித்தும் நிர்வாகம் தன் பார்வையை செலுத்த வேண்டியுள்ளது என்பதை இந்த நேரத்தில் நாம் பதிவு செய்கிறோம். நம்முடைய ஊதிய உயர்வு , பஞ்சப்படி இணைப்பு போன்ற கோரிக்கைகளை இலாக்காவிடம் நாம் வலியுறுத்தவில்லை. அதற்கான அரங்கு என்பது வேறு. மத்திய அரசின் பார்வையில் அதிகாரிகள் உள்ளிட்ட, அனைத்து மத்திய அரசு ஊழியர்கள் சார்பாக அதனை நாம் கொண்டு செல்கிறோம்.
ஆனால் நம்முடைய இலாக்காவில் , நிர்வாக கட்டமைப்பிற்கு ஒரு திசைப் பார்வை மட்டுமே உள்ளது என்பதே நம் ஊழியர்களிடம் உள்ள மனத் தாங்கல். அதனை இந்தப் புத்தாண்டில் தெரிவிக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது.
உதாரணமாக
இலாக்காவின் தகவல் தொழில் நுட்ப மேம்பாட்டுக்கு ரூ. 4909/- கோடியை
ஒதுக்கியது மத்திய அரசு. அதில் ஒரு பைசா கூட நம்முடைய தகவல்
தொழில் நுட்ப அடிப்படை கட்டுமானத்திற்கு அளிக்கப்படவில்லை என்பது வேதனை அல்லவா ?
2000 - 2004 களில் அளிக்கப் பட்ட காலாவதியான கணினிகள் , PRINTER கள் , UPS - BATTERY கள் , BAR CODE SCANNER கூட இல்லாத அலுவலகங்கள் -இதனை வைத்துக் கொண்டு "நொண்டிக் குதிரையில் ஏறி டெல்லிப் பட்டினம்போ" என்று விரட்டுவது வேடிக்கையான விஷயமில்லையா? உடனே பரிசீலிக்க வேண்டிய ஒரு அத்தியாவசியமான அவசர அவசியம் இல்லையா ?
TECHNOLOGY TRANSFER என்ற வகையில் மென்பொருள் அளிப்பதற்கே ரூ.4909 கோடி பன்னாட்டு நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பது சரிதானா ?
அதுவும் நமது துறைக்கென்று பிரத்தியேகமாக , அதன் சட்ட விதிகள் ,
சேமிப்பு வங்கி தொடர்பான நம்முடைய இலாக்காவின் தனித்துவமான திட்டங்கள் , காப்பீட்டுப் பகுதியில் நம்முடைய இலாக்காவின் தேவைகள் குறித்தெல்லாம் முறையான ஆய்வு செய்து அதற்கான மென்பொருள் வடிவமைத்துப் பெறாமல் , எவருக்கோ செய்த காலணியை நாம் மாட்டிக் கொள்வதற்கு "நம்முடைய பாதங்களை வெட்டுவது போல" இன்று இந்த திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவது சரிதானா ?
இதுபோலத்தான் , MAIL OPERATION, FINANCE & ACCOUNTS, RETAIL OPERATION, RURAL ICT, HR போன்ற பகுதிகளிலும் தனித்துவமான மென் பொருள் பெறாமல் வேறு எவருக்கோ செய்தது நமக்கு வழங்கப்படுமா ?
இதனையெல்லாம் சரி செய்திட வேண்டிய கடமை உள்ள, அதற்காக ஒப்பந்தங்கள் போட்டு (2 YEARS FOR IMPLEMENTATION , 5 YEARS FOR MAINTANANCE) பல நூறு கோடிகள் வாங்கிய நிறுவனங்கள் , பிரச்சினைகளை தீர்த்திட களத்தில் இல்லாமல் ஓடிப் பதுங்குவதும், நம் அப்பாவி ஊழியர்கள் பிரச்சினைகளைத் தீர்த்திட ' இரவு பகலாக " களத்தில் வேலை செய்ய வேண்டி உள்ளதும் சரிதானா ?
"இட்லி திங்கச் சொன்னது ஒருத்தனையாம் - ஏப்பம் விடச்சொன்னது இன்னொருத்தனையாம் " என்ற கிராமத்து பழமொழி இதற்காகத்தான் வந்ததோ ?
தினந்தோறும் எத்தனை எத்தனை பிரச்சினைகள் ? "கழுதை முதுகில் வைத்த சுமை போல" எல்லாம் பழகினால் சரியாகிவிடும் என்பதும் சரிதானா ?
எந்த அளவு "அலைக்கற்றை பரிமாணம் " தேவை என்று கூட அறியாமல் LAPTOP இல் போடும் DATA CARD க்கு உண்டான 256 KBPS /512 kbps BANDWIDTH மட்டும் பெற்று அதில் "மின்னல் வேகத்தில் TRANSACTION" என்று வெறும் "அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு பேட்டி கொடுப்பது" சரிதானா ?
NET WORK CONNECTIVITY இல்லாததால் TRANSACTION செய்திட இயலாமல் பொதுமக்களிடம் அடிவாங்கும் அளவுக்கு ஊழியர் அவதியுறுவது தெரியாதா ? எத்தனை ஊரில் போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டது ? இது தெரியவே தெரியாதா ?
இப்போது மேம்படுத்தப்பட்டு விட்டது என்று இன்னமும் நாம் 'பொய்' கூறிக் கொண்டுதானே உள்ளோம் ? பல நாட்கள் 'HANG OVER ' இல் ஊழியர்படும் அவதி , மறுநாள் மறந்து விடும் என்று சமாதானம் செய்தால், பொது மக்களும் அப்படியே சமாதானமாகி விடுவார்களா ?
பல நூறு கோடிகள் கொடுத்து ஒப்பந்தம் போடும் முன்னரே உரிய தொழில் நுட்ப மற்றும் துறை சார் அறிவு கொண்ட அதற்கான வல்லுநர் குழு அமைத்து அனைத்து பகுதிகளையும் ஆய்வு செய்து ஒப்பந்தங்கள் போட வேண்டாமா ? ஏனோ தானோ வென்று ஒப்பந்தங்கள் போடப்பட்டு , அதன் பாதிப்புகள் அனைத்தையும் அடிமட்ட தொழிலாளி தலையில் கட்டி " ஓடு ஓடு" என்றால் எப்படி ஓடுவது என்று சிந்திக்க வேண்டாமா ?
இத்தனைக்கும் நம் எழுத்தரின் அடிப்படை கல்வித்தகுதி +2 தானே ? மேலும் அதில் பாதி பேர் , பழைய 8TH STANDARD QUALIFICATION இல் தேர்வு செய்யப்பட்டு தபால்காரராக /MTS ஆக பணியாற்றி பதவி உயர்வு பெற்ற எழுத்தர் தானே ? இவர்கள் ஒரே நேரத்தில் 58 SOFTWARE நம் துறையில் HANDLE செய்யும் அளவு அறிவு பெற்றவர்களா ? 1200 SCREEN SHOT நினைவில் கொள்ளும் வண்ணம் தொழில் நுட்ப அறிவு மேம்பட்ட தகவல் தொழில் நுட்பத் துறையில் உயர் கல்வி பெற்றவர்களா ? இருந்தும் இத்தனை பல்நோக்கு உள்ள அனைத்து வேலைகளையும் செய்கிறார்கள் என்பது உலகிலேயே எந்தத் துறையிலும் இல்லாத புதுமை இல்லையா ? இது குறித்து என்றாவது , எவராவது ஒரு வரி பாராட்டியது உண்டா ? பாராட்டு கூட ஒரு "ஊக்க மருந்து" தானே ?
வேறு எந்த மத்திய அரசுத் துறையிலாவது ஒரே நேரத்தில் 58 SOFTWARE கணினிகளில் பயன்பாட்டிற்கு உள்ளதா ? ஏன் ? தொழில் நுட்ப முதுகலைப் பட்டம் அல்லது தொழில் நுட்ப பொறியாளர் பட்டம் பெற்ற உயர் கல்வி பெற்றவர்கள் பணி புரியும் MNC க்களில் கூட இத்தனை SOFT WARE ஒரு ஊழியர் கையாள்கிறாரா ? இல்லையே !
இவ்வளவு ஊழியம் செய்தும், அதுவும் INITIALISATION காலத்தில் 'TRANSITION' காலத்தில், ஊழியர் தம் பணியில் ஒரு சிறு தவறு செய்தால் கூட, அதனை தொழில் நுட்ப ரீதியாக சரி செய்திடும் விபரம் கூட சிறிதும் தெரிந்துகொள்ளாத சில கீழ்மட்ட அதிகாரிகள் , தனக்கு "RULE 16 போடுவது தவிர வேறு எதுவும் தெரியாது" என்ற வகையில் ஊழியர்களை தினம் தினம் பழிவாங்கும் போக்கு மிகவும் அதிகமாகி உள்ளதே ? அது உங்களுக்கு தெரியுமா ? பல இடங்களில் கூக்குரல் கேட்கிறதே ? அது உங்களுக்குப் புரியுமா ?
BUSINESS DEVELOPMENT கூட்டங்களில் வெறும் TARGET பற்றி மட்டும் பேசினால் , அதனை சாதிக்க வேண்டிய அடிமட்ட ஊழியர் சரியான WORKING ENVIRONMENT இல்லாவிட்டால் எவ்வாறு சாதிப்பான் என்பது குறித்து ஆய்வு செய்வது கிடையாதா ?
வணிக வளர்ச்சி, மாத இலக்கு என்ற பெயரில் 'MULTI LEVEL MARKETING COMPANY " கள் போல "உன் பெண்டாட்டி பேரில் 100 RD கணக்கு" , "பிள்ளை பேரில் 100 RD கணக்கு" , அடுத்த PREMIUM மே கட்டாத "'பினாமி " RPLI பாலிசிகள் GDS ஊழியர் சம்பளத்தில் போடு" என்று வணிக யுக்தியே சிறிதும் தெரியாத சில கீழ்மட்ட அதிகாரிகளின் தினசரி நடவடிக்கைகள் நம் துறையை நிஜமான வளர்ச்சி பெற வைக்குமா ? வீழ்ச்சி பெற வைக்குமா ? இது குறித்து சிந்திக்க வேண்டாமா ? வணிக வளர்ச்சி கூட்டங்களில் பேசுவது உண்டா ?
EPOST சேவை எதற்காக துவங்கப்பட்டது என்பதே தெரியாமல், போட்டியில்லாத , எவருமே போட்டியிட முடியாத இந்த சேவைப் பகுதியை எவ்வாறு விரிவாக்கம் செய்வது என்பது கூட தெரிந்துகொள்ளும் அடிப்படை அறிவு (KNOWLEDGE ) இல்லாமல் "சினிமா நடிகை பிறந்த நாளுக்கு 1000 EPOST போடு" "ரசிகர் மன்றம் நீயே அமை" என்றெல்லாம் கோமாளித்தனம் செய்யும் கீழ் மட்ட அதிகாரிகளை உங்களுக்குத் தெரியவே தெரியாதா ? இவையெல்லாம் நம் துறையை வளர்ச்சி பெற வைக்குமா ? இது குறித்து சிந்திக்க வேண்டாமா ?
பல ஆயிரக் கணக்கான காலியிடங்களை நிரப்பவே வேண்டாமா ?
காலியிடங்களை நிரப்ப போராடி நடவடிக்கை எடுத்தாலும், தேர்வு முடிவுகள் வெளி வருவதில் ஆண்டுக் கணக்காக ஆகிறதே ? இது சரி செய்யப் பட வேண்டாமா ?
புதிய வேலைகளுக்கு அளவீடு என்பது வேண்டாமா ?
இப்படி எத்தனை எத்தனையோ கேள்விகள் - சாதாரண அடிப்படை ஊழியனின் மனதில் - புத்தாண்டு கேள்விகள் உண்டு ! இவற்றையும் நிச்சயம் பரிசீலிக்க வேண்டிய கடமை நம் நிர்வாகத்திற்கு உண்டு !
இந்த திசை நோக்கியும் பார்த்தால் மட்டுமே நம்மால் இலாக்காவை நினைக்கும் திசையில் , உரிய வேகத்தில் , கொண்டு செல்ல முடியும் ? ஒரு திசைப் பார்வையில் "இலக்கு " "இலக்கு" என்று சாட்டையை சுழற்றினால் அதில் பெறுவது நிச்சயம் வளர்ச்சியாக இருக்காது . வீக்கமாகவே இருக்கும் . செயற்கையான வீக்கம் நோயின் அடையாளம் !
நாம் நோய் பெறப் போகிறோமா ? வளர்ச்சி பெறப் போகிறோமா ? என்பது
நம் கையில் இருக்கவேண்டும் என்று நிர்வாகம் நினைப்பது போல , நிர்வாகமும் அப்படி நினைக்கவேண்டும் என்று இந்தத் துறையின் ஊழியர்களான நாம் நினைப்பதில் தவறு எதுவும் உண்டோ ? சிந்திக்க வேண்டுகிறோம்.
Subscribe to:
Posts (Atom)