Wednesday 22 April 2015

INDEFINITE STRIKE FROM 6TH MAY 2015

TN PJCA CIRCULAR ON INDEFINITE STRIKE FROM 6TH MAY 2015

NFPE                     JCA                      FNPO
அஞ்சல்–RMS, MMS, GDS ஊழியர் கூட்டுப் போராட்டக் குழு,
தமிழ் மாநிலம் , சென்னை 600 002.
கூட்டு சுற்றறிக்கை எண்: 3                                                               தேதி : 21.04.2015
அஞ்சல் JCA வின் தொடர் போராட்டங்கள்
       அன்புத் தோழர்களுக்கு  வணக்கம் !கடந்த 28.07.2014 இல் புது டெல்லியில் கூடிய POSTAL JCA ஊதியக் குழு தொடர்பான கோரிக்கைகள் மற்றும் இலாக்காவில் தேங்கிக் கிடக்கும் பகுதிவாரிக் கோரிக்கைகளை ஒன்றுபடுத்தி  39 அம்சக் கோரிக்கைகளின் மீது நாடு தழுவிய அளவில் நான்கு கட்ட போராட்டம் அறிவித்தது . அதனை நாம் சிறப்பாக நடத்தினோம். நான்காவது கட்ட போராட்டமாக கடந்த 04.12.2014 அன்று  புது டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியிலிருந்து பாராளுமன்றம் நோக்கிய  அஞ்சல் JCA  வின் பேரணி  மாபெரும் வெற்றியைப் பெற்றது. 
TASK FORCE இன் அறிக்கையும் CORPORATISATION முடிவும்
    ஆனாலும் கூட இலாக்காவில் இது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் மத்திய அரசினால், ஒய்வு பெற்ற காபினெட் செயலர் திரு. T.S.R.  சுப்பிரமணியன் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட TASK FORCE கமிட்டி தனது பரிந்துரைகளை துறை  அமைச்சகத்துக்கு கடந்த நவம்பரில் சமர்ப்பித்தது. அதன்படி அஞ்சல் இலாக்கா ஆறு கூறாகப் பிரிக்கப்பட்டு அதில் MAIL COMMUNICATION TRANSMISSION என்ற பகுதியான தபால்களைக் கையாளும் பகுதி மட்டும் அஞ்சல் துறையின் வசமும், இதர பகுதிகளான
 a) BANKING AND FINANCIAL SERVICES INCLUDING PBI
b) INSURANCE ( PLI, RPL/OTHER INSURANCE SCHEMES) 
c) DISTRIBUTION OF THIRD PARTY PRODUCTS
d)  PARCELS AND PACKETS, E-COMMERCE BUSINESS, TIE UPS AND AGREEMENTS, BILL COLLECTIONS AND PAYMENTS ETC.
e) MANAGEMENT OF GOVERNMENT SERVICES (AADHAR CARDS, RATION CARDS, GOVT. BILL COLLECTIONS/PAYMENTS ETC).
     இவை STRATEGIC BUSINESS UNITS ஆக  அறிவிக்கப்பட்டு  CORPORATE சட்டத்தின் கீழ்  HOLDING COMPANY யாக INDIA POST ( FINANCIAL AND OTHER SERVICES ) CORPORATION  என்று அமைக்கப்படும். இதன் பங்குகள் SHARE MARKET மூலம் தனியார் முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்யப்படும். மேலும் இவ்வாறு CORPORATISE செய்வதற்கென்று தனியாக சட்ட முன்வடிவும் தயாரிக்கப்பட்டு நமது துறை அமைச்சகத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டது . இதன் பரிந்துரைகளை நமது துறை அமைச்சகம் ஏற்றுக்கொண்டு  பிரதம அமைச்சரின் ஒப்புதலுக்காக சம்பந்தப்பட்ட கோப்புகளை அனுப்பியுள்ளது.
மீண்டும் ஐந்து கட்ட போராட்டம்
     இந்த சூழலில் நமது  அஞ்சல் துறையை அரசுத் துறையாக காத்திட, போராட்ட களத்தை விரிவு படுத்த வேண்டி நமது அஞ்சல் JCA, “அஞ்சல் இலாக்கா சேவையை CORPORATION  மற்றும் தனியார் மயமாக்காதே” என்ற கோரிக்கையை முதன்மைக் கோரிக்கையாக வைத்து மீண்டும் போராட்ட அறிவிப்பினை வெளியிட்டது. இதன் மீது கடந்த 05.02.2015  அன்று  PJCA தலைவர்களுடன் இலாக்கா பேச்சு வார்த்தை நடத்தியது. அந்தப் பேச்சு வார்த்தையில் , நமது துறை ரீதியான ஒரு சில கோரிக்கைகளில் மட்டும் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டதே தவிர, இதர முக்கிய கோரிக்கைகளில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
  

     மேலும் TASK FORCE இன்  CORPORATISATION பரிந்துரை மீது நம்முடைய துறையின் செயலருக்கு எந்தவித ஆளுமையும் இல்லாத காரணத்தால், இந்தப் பரிந்துரைகளை உடனே கைவிட வேண்டி மத்திய அரசுக்கு நிர்ப்பந்தம் அளித்திட, புதிதாக வடிக்கப்பட்ட 26  அம்சக் கோரிக்கைகளை முன்னிறுத்தி,  அஞ்சல் JCA மீண்டும்  ஐந்து கட்ட போராட்டங்களை அறிவித்தது. அதன்படி கோரிக்கைகளை வலியுறுத்தி  கடந்த 20.02.2015 அன்று கோட்ட மட்டங்களில் ஆர்ப்பட்டமும் 27.02.2015 அன்று மண்டல அளவிலான தார்ணா போராட்டமும் 02.03.2015 அன்று மாநில அளவிலான தார்ணா போராட்டமும் நடத்தப்பட்டன. மேலும் நான்காவது கட்டமாக எதிர்வரும் 29.04.2015 அன்று  DAK BHAVAN  முன்பாக மாபெரும் தார்ணா போராட்டமும் நடத்தப்பட உள்ளது.
நாடு தழுவிய அளவில் காலவரையற்ற வேலை நிறுத்தம்
       26 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த  06.04.2015 அன்று NFPE மற்றும் FNPO வின் கீழுள்ள அனைத்து சங்கங்களின் பொதுச்செயலர்களும் எதிர்வரும் 06.05.2015 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் செல்வதற்கான சட்டரீதியான வேலை நிறுத்த நோட்டிசை இலாக்காவுக்கு முறையாக வழங்கினர். பிரச்சார இயக்கத்தின் ஒரு பகுதியாக, PJCA வின் சுற்றுப் பயண அறிக்கையின்படி, அகில இந்திய மற்றும் சம்மேளன தலைவர்கள் கலந்துகொள்ளும் வேலை நிறுத்த ஆயத்தக்  கூட்டம் சென்னையில் நடைபெற உள்ளது .
வேலை நிறுத்த ஆயத்தக் கூட்டம்
நாள் : 25.04.2015   நேரம் :                           மாலை  06.00 மணி
இடம் : MEETING HALL,  CHIEF PMG அலுவலக கட்டிடம் 
         நான்காவது மாடி, சென்னை
வேலை நிறுத்த விளக்க உரை :
தோழர். D. தியாகராஜன், மா பொதுச் செயலர் , FNPO
தோழர். S. ரகுபதி , உதவி மாபொதுச் செயலர், NFPE
தோழர். P. பாண்டுரங்கராவ் , பொதுச் செயலர்,  AIPEU GDS NFPE
எனவே இந்த கூட்டத்தில் பெருமளவில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அனைத்து பகுதி நிர்வாகிகள், தோழர்கள் மற்றும் தோழியர்களை தமிழக அஞ்சல் JCA அன்புடன் வேண்டுகிறது.
வாழ்வா சாவா போராட்டம்  
        நம் அஞ்சல் துறையின், அரசுத் துறை என்ற கட்டமைப்பு உடைக்கப்பட்டு, பொது மக்கள் சேவை அடியோடு ஒழிக்கப்பட்டு எதிர்காலம் BSNL போல CORPORATE மயமாக்கப்பட்டு ,  பன்னாட்டு நிறுவனங்களின் ஆளுகைக்கு கொண்டுவரப்பட உள்ள அநீதியை எதிர்த்துப் போராட, நம் வாழ்வாதாரம் காக்கப்பட நாம் அனைவரும் ஒட்டுமொத்தமாக திரண்டெழுந்து போராட வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
        இந்தப் பிரச்சினையை அடிமட்டத்தில் உள்ள ஒவ்வொரு ஊழியரின் பார்வைக்கும் உணர்வுக்கும் கொண்டு செல்ல வேண்டியது நம் அனைவரின் கடமை ஆகும். எனவே தமிழகம் முழுவதும் ஆங்காங்கு கோட்ட / கிளைகளில் உடனே JCA அமைத்திட  வேண்டுகிறோம். வேலை நிறுத்த ஆயத்தக் கூட்டங்கள், உணவு இடைவேளை கூட்டங்கள், வாயிற் கூட்டங்கள் உடன் நடத்தி ஊழியர்கள் மத்தியில் இந்தப் பிரச்சினைகளை கொண்டு செல்ல வேண்டுகிறோம். ஆங்காங்கு உள்ள அனைத்து சங்கங்களின் மாநில/அகில இந்திய சங்க நிர்வாகிகளை அழைத்து கூட்டங்கள் நடத்திட வேண்டுகிறோம். மேலும் அனைத்து கோட்டங்களிலும் கிளைகளிலும் JCA மூலம் சுற்றறிக்கை வெளியிட வேண்டுகிறோம். எதிர்வரும் மே திங்கள் ஆறாம் தேதி முதல் நடைபெற உள்ள காலவரையற்ற வேலை நிறுத்தத்தை நூற்றுக்கு நூறு முழுமையான வெற்றிகரமான வேலைநிறுத்தம் ஆக்கிட வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை ஆகும் .
  
இது கார்பரேட் மயத்திற்கு எதிரான போராட்டம் !
இது  தனியார் மயத்திற்கு எதிரான போராட்டம் !
இது நம் துறை காக்கும் போராட்டம் !
இது நம் கோரிக்கைகளை வென்றெடுக்க வாழ்வா சாவா போராட்டம் !
போராடுவோம் !    வெற்றி பெறுவோம் !
ஒன்று பட்ட போராட்டம் ! ஒன்றே நமது துயரோட்டும் !
போராட்ட வாழ்த்துக்களுடன்
NFPE                                      FNPO
மாநிலச் செயலர்கள்
J. ராமமூர்த்தி  P 3                                    K. குணசேகர் , P4
G. கண்ணன்   P 4                                        P. குமார்   R 3
K.. ரமேஷ்  ,  R3                                                 S. ஸ்ரீதரன், R 4
B. பரந்தாமன்,  R 4                                                C.P.குணசேகரன் , ADMIN
P. நாகராஜன், ADMIN                                  G.அந்தோணி , ELE.& CIVIL WING
B.சங்கர் ,  ACCOUNTS                                  P. கோதண்டராமன் , GDS
                 
M.P.P.கார்த்திகேயன் , SBCO                  
R. தனராஜ்,   GDS
கோரிக்கைகள்

1. அஞ்சல் இலாக்கா சேவையை CORPORATION  மற்றும் தனியார் மயமாக்காதே !

2GDS ஊழியர்களை ஏழாவது ஊதியக் குழுவின் வரம்புக்குள் கொண்டுவந்து அவர்களுக்கு அரசு ஊழியர் அந்தஸ்து வழங்கு. அரசு ஊழியர்களுக்கு உண்டான அனைத்து சலுகைகளையும் மற்றும் விகிதாசார அடிப்படையில் ஊதியமும் எந்த வித பாகுபாடும் இன்றி வழங்கு.

3.காசுவல், பகுதி நேர, CONTINGENT ஊழியர்களை பணி நிரந்தரம் செய். அதற்கான வரம்பு காலத்தை நீக்கு.

4. 01.01.2014  முதல் GDS ஊழியர் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களுக்கும், 100 % பஞ்சப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைத்து எல்லா வித பயன்களையும் அதன் மீது வழங்கி விடு .

5. 01.01.2014 முதல் 25%  அடிப்படை ஊதியத்தை GDS உள்ளிட்ட அனைத்து ஊழியர்களுக்கும் இடைக்கால நிவாரணமாக வழங்கி விடு.

6. புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய். 01.01.2004  க்குப் பின்னர் பணியில் அமர்ந்த ஊழியர்களுக்கும்  அதற்கு முன்னர் உள்ளதுபோல சட்டபூர்வமான பாதுகாக்கப்பட்ட பென்ஷன் வழங்கி விடு.

7. கருணை அடிப்படையிலான பணி நியமனங்களில் உள்ள 5% கட்டுப்பாட்டை நீக்கு. பணியில் இறந்த அனைத்து ஊழியர்களின் வாரிசுகளுக்கும் வேலை கொடு. GDS ஊழியர்களுக்கு உள்ள குறைந்த பட்ச 50% புள்ளிகள் என்ற உத்திரவை உடனே நீக்கு .

8.  MMS, GDS உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள காலியிடங்களை , நேரடி நியமனம், இலாக்கா பணிமூப்பு பதவி உயர்வு ,  தேர்வு முறை பதவி உயர்வு என்று எல்லா வழிகளிலும் தாமதமின்றி நிரப்பு. காலாவதியான MMS வாகனங்களை மாற்றி புதிய வாகனங்களை வழங்கு .

9.  JCM இலாக்கா குழு ஊழியர் தரப்புக்கு அளித்த உடன்பாட்டின்படி கேடர் சீரமைப்புத் திட்டத்தை அஞ்சல் , RMS, MMS, கணக்குப் பிரிவு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் உடனே அமல் படுத்து.

10. POSTMASTER GRADE ஊழியர்களுக்கு உண்டான பிரச்சினை தீர்த்து வை. IP, GR. B தேர்வு எழுதிட அனுமதி. பதவி உயர்வில் உள்ள சேவைக்கால இடைவெளியை  GENERAL LINE ஊழியர்களுக்கு உள்ளது போல , அதற்கு சமமான பதவி உயர்வுகளில் வழங்கி விடு. அனைத்து   PSS GR. B, PM GRADE III, PM GRADE II  காலிடங்களையும்  நிரப்பிடு.  அதற்கு உண்டான தகுதி அடிப்படை பூர்த்தியாகாவிட்டால் அனைத்து காலியிடங்களையும் ADHOC PROMOTION அடிப்படையில் நிரப்பி விடு. POSTMASTER CADREக்கு ஒதுக்கப் பட்ட அனைத்து SENIOR POSTMASTER/CHIEF POSTMASTER பதவிகளையும் POSTMASTER CADRE ஊழியர்களைக் கொண்டு நிரப்பிடு . இதற்கான CIRCLE GRADATION LIST வெளியிடு.

11. SYSTEM ADMINISTRATOR களுக்கு முழுமையான   ROAD MILEAGE ALLOWANCE வழங்கி விடு. அவர்களின் பணித்தன்மை மற்றும் பணி நேரத்தை வரையறை செய்.  SYSTEM ADMINISTRATOR களுக்கு தனியான கேடர் உருவாக்கு.

12. நிர்வாக மற்றும் RMS அலுவலகங்களில் உள்ளது போல  அஞ்சல் பகுதி காசாளர்களுக்கு CASH HANDLING ALLOWANCE வழங்கி விடு.

13.  PO & RMS ACCOUNTANT களுக்கு வழங்கப்படும் SPECIAL ALLOWANCEஐ பதவி உயர்வுக்கான ஊதிய நிர்ணயக் கணக்கீட்டிற்கு எடுத்துக் கொள்.

14.    I.T. MODERNISATION PROJECT செயல்படுத்துவதில் உள்ள அனைத்து பிரச்சினைகளையும் உடனே தீர்த்து வை. உதாரணம் :   COMPUTERISATION, CORE BANKING SOLUTION, CORE  INSURANCE SOLUTION ETC. காலாவதியான கணினி, PRINTER உள்ளிட்ட கணினி பயன்பாட்டு சாதனங்களை புதிதாக உடனே மாற்றி வழங்கு. NETWORK மற்றும் BANDWIDTH அளவுகளை உயர்த்து. ஊழியர் விடுப்பு நாட்களில் மாற்று ஊழியருக்கு உண்டான USER CREDENTIAL  பிரச்சினைகளை தீர்த்து வை.  CBS, CIS  செயல்பாட்டில் உள்ள குளறுபடிகளை முழுமையாக களைந்திடாமல் அவசர கதியில்  MIGRATION செய்து, சேவைக் குறைபாட்டை ஏற்படுத்தி  பொது மக்கள் பார்வையில்  இலாக்கா பெயரை அசிங்கப் படுத்தாதே. CBS, CIS திட்ட அமலாக்கத்தில்  ஊழியர்களுக்கு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திட எல்லா உதவிகளையும் வழங்கு. SERVICE PROVIDER களை கட்டுப் படுத்தாமல் ஊழியர்களை கொடுமைப் படுத்தாதே. HEAD POSTMASTER களுக்கு உயர் நிதி செலவீட்டு அதிகாரத்தை வழங்கு.

15.  மாதாந்திரப் பேட்டிகள், இரு மாத, நான்கு மாத பேட்டிகள், JCM கூட்டங்கள், WELFARE BOARD, SPORTS BOARD MEETING ஆகியவற்றை முறையான கால அளவீட்டில் நடத்து. இதற்குண்டான உறுப்பினர்களை அங்கீகரிப்பட்ட சங்கங்களின்  பிரதிநிதிகளைக் கொண்டு உடன் நிரப்பு .

16. GDS ஊழியர்களுக்கு முழுமையான ஊதியப்பாதுகாப்பு (FULL PROTECTION OF TRCA) வழங்கி விடு. ஊதியக் குறைப்பு செய்யாதே. MEDICAL REIMBURSEMENT திட்டத்தை GDS ஊழியர்களுக்கும் அமல்படுத்து. CASH HANDLING NORMS மாற்றி அமை.

17. அனைத்து   C.O.,  R.O.,   DPLI OFFICE, KOLKATA   அலுவலகங்களும் CORE INSURANCE SOLUTION க்கு  CIRCLE PROCESSING CENTRE  ஆக பணி செய்ய உத்திரவு வழங்கு.  PLI/ RPLI சேவையை மேம்படுத்து.  615   எழுத்தர் பதவிகளை  C.O. PLI    மற்றும் APS PLI CELL பகுதியில் இருந்து DIVERSION செய்ய வழங்கப் பட்ட உத்திரவை ரத்து செய். நிர்வாக அலுவலகங்களில் உள்ள ஊழியர்களை DECENTRALISATION பெயரால் கொடுமைக்கு ஆளாக்காதே.

18இலாக்கா கட்டிடங்கள், ஊழியர் குடியிருப்புகள், RMS ஒய்வு இடங்கள் போன்றவற்றை  புதிதாக கட்டுவதற்கும், பழுது  பார்ப்பதற்கும், பராமரிப்பு பணிகள் செய்வதற்கும் உரிய நிதி உடனே வழங்கு.

19. தபால்காரர் மற்றும் MTS காலிப் பணியிடங்கள் அனைத்திலும் SUBSTITUTE ARRANGEMENT வழங்கு. GDS பதிலி இல்லாத இடங்களில் காலியிடங்களில் பணிபுரிய OUTSIDER களை அனுமதி.

20.  DOOR TO DOOR DELIVERY முறையில் தபால்காரர் பணி நேரத்தை கணக்கிடு. 22.05.1979 இல் வெளியிடப்பட்ட பழைய கணக்கீட்டு உத்திரவை  மாற்றி அமை.

21.      L  1  அலுவலகங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்து.

22.  SB  BRANCH பணிகளை  SBCO விடம் திணிக்காதே.  SBCO  ஊழியர்களுக்கு APAR வழங்கும் பணியை AO (SBCO) விடம் அளி.

23. குறித்த காலத்தில் தரமான சீருடை, காலணி மற்றும் குடை வழங்கு. இதில் உள்ள பழைய அளவீட்டு முறையை மாற்று.

24. GM FINANCE,CHENNAI யின் ஊழியர்களை பழி வாங்கும் போக்கை தடுத்து நிறுத்து. நூற்றுக்கணக்கான கணக்குப் பிரிவு ஊழியர்களுக்கு வழங்கப் பட்ட தண்டனையை ரத்து செய்.

25. 2012 இல் நடைபெற்ற  JAO POSTAL  PART II தேர்வின் மதிப்பெண்களை SC/ST ஊழியர்களுக்கு மறு பரிசீலனை செய்.

26. POSTMAN/MG/ MTS RECRUITMENT RULES மாற்றி அமை. வெளியார் தேர்வு முறையை ரத்து செய்.  முன்பிருந்தது போல பணி மூப்பு அடிப்படை  பதவி உயர்வு முறையை திரும்ப அமை.

Thursday 9 April 2015

LTC Claims – Need for observing prescribed procedures

LTC Claims – Need for observing prescribed procedures
G.I., Dept. of Pers. & Trg., O.M.F.No.31011/3/2015-Estt (A-IV), dated 01.04.2015

Subject:- LTC Claims – Need for observing prescribed procedures
This Department receives a large number of recommendations for relaxation of some or the other provision of the Central Civil Services (Leave Travel Concession) Rules, 1988, (hereinafter referred to as LTC Rules), in individual cases. It is seen that, in most cases the situation arises are due care had not been exercised by the Government servant and/or the administrative authority in claiming LTC or in examination.
2.The references mainly relate to:
a) Late submission of claims;

b) Booking of air tickets through an agency not authorized by the Government for this purpose;
c)Travel by private vehicles; and
d)Claims for wrong block of years.
3.In this connection it may please be noted that the primary responsibility for ensuring compliance with the rules is that of the Government servant. The of-repeated plea of ignorance of rules cannot be a valid ground for relaxation of rules. At the same time it has also been noticed that the administrative authorities have also shown laxity and due diligence on their part could have prevented such situations from arising.
4.Late Submission of Claim
4.1 In terms of Rules 14 and 15(vi) of LTC Rules, the time limit for submission of LTC claim is :
i) Within three months of completion of return journey, if no advance is drawn;
ii) Within one month of completion of return journey, if advance is drawn.
Powers have been delegated, as under, to the Ministries/Departments to relax these limits with the concurrence of the Financial Advisor.
a) Upto 6 months, if no advance is drawn;
b) Upto 3 months if advance is drawn, provided the Government servant refunds the entire amount of advance (not merely the unutilized portion) within 45 days of completion of return journey.
4.2 As per Rule 12(a) of the “Compendium of Rules on Advances to Government Servants”, it is the responsibility of the Head of Office to effect recovery of advances and also to see that the conditions attached to each advance are fulfilled. The Drawing and Disbursing Officer (DDO) is required to keep a watch on the advances and furnish monthly statements to the AP&AO. In addition, the DDO is also required to adjust all outstanding short term advances at the close of financial year.
5.Booking of air tickets through agents other than Government approved agents
5.1 Government servants travelling by air under LTC are required to book their tickets either directly from the airline or through the approved agencies viz: M/s Balmer Lawrie & Co. Ltd/ M/s Ashok Tours & Travels Ltd/IRCTC. Booking through any other agency is not permissible.
6. Travel by private vehicles.
6.1 As per LTC rules, a Government servant may travel only by vehicles operated by Central/State Government or local bodies or by any corporation in the public sector owned/controlled by Central/State Government. Journey on LTC by taxi, auto-rickshaw etc, are permissible only between places not connected by rail. This is further subject to the condition that these modes operate on a regular basis from point to point with the specific approval of the State Governments/transport authorities concerned and are authorized to ply as public carriers.
7. Claims for wrong block of years
7.1 Whenever a Government servant applies for LTC advance, the administrative authority is required to verify from the service book and certify the entitlement of the Government servant. Cases of the type mentioned in para 2(d) would not arise, if this is properly done.
8. LTC Rules also provide that a government servant who has been granted LTC Advance is required to submit copies of the tickets within 10 days of drawal of advance. The administrative authority can at this stage itself check the date of commencement of journey; whether ticket has been booked direct from airline or through approved agency etc. Any discrepancy can be brought to the notice of the government servant so that he can take remedial action, if needed.
9. Even in cases where advance is not drawn, the Government servant is required to give prior intimation of his intention to avail LTC. The administrative authority can check the details indicated especially w.r.t entitlement. A watch can also be kept to ensure timely submission of claims.
10. All Ministries/Departments are requested to bring the contents to this O.M. to the notice of all concerned. It may also be noted that requests for relaxation of rules shall be considered by this Department only if it is established that the deviation is due to reasons beyond the control of the Government servant and there has been no laxity on the part of the administrative authorities concerned.
Source : www.persmin.gov.in