போராட்டக் களம் நோக்கி தமிழக அஞ்சல் மூன்று மற்றும் GDS சங்கம் !
26.01.2015 SRMU சங்க கட்டிடம் திருச்சி
திருச்சியில் ஒரு திருப்பு முனை !
தமிழக அஞ்சல் மூன்று மற்றும் NFPE GDS சங்கங்களின்
மாநில அளவிலான கோட்ட/ கிளைச் செயலர்கள் கூட்டம் !
மூன்று கட்ட போராட்டம் !
முதற் கட்டம் கோட்ட/ கிளைகளில்
கோரிக்கை மனு அளித்து ஆர்ப்பாட்டம் !
இரண்டாவது கட்டம்
மண்டல மாநில அளவில் தொடர் முழக்கப் போராட்டம் !
மூன்றாவது கட்டம்
மாநிலம் தழுவிய ஒரு நாள் வேலை நிறுத்தம் !
தமிழக அஞ்சல் நிர்வாகமே !
CBS /CIS அதிரடி MIGRATION என்ற பெயரில் ஊழியர்களை
கொடுமைப் படுத்தாதே !
CBS /CIS குளறுபடிகளுக்கு உடனடி தீர்வு கொடு !
பொது மக்களிடம் ஊழியர்களை அசிங்கப்படுத்தாதே !
TARGET என்ற பெயரில் எந்தவித அடிப்படை
வசதியும் செய்து கொடுக்காமல் INDOOR ஊழியர்கள்
மற்றும் GDS ஊழியர்களை கொடுமைப் படுத்தாதே !
EPOST என்ற பெயரில் சினிமா நடிகைகளுக்கும்
அரசியல் வாதிகளுக்கும் காவடி தூக்கும், இலாக்காவை
அசிங்கப்படுத்தும் அதிகாரிகள் மீது ஒழுங்கு
நடவடிக்கை எடு !
ஆட்பற்றாக்குறையை உடனே நீக்கு !
SANCTIONED STRENGTH மற்றும் WORKING STRENGTH க்கு இடையிலான காலிப் பணியிடங்களை உடனே நிரப்பு !
IRREGULAR ASSESSMENT செய்த அதிகாரிகள் மீது
ஒழுங்கு நடவடிக்கை எடு !
ஆட்பற்றாக்குறைக்கு உடனே OUTSOURCING வழங்கிடு !
OUTSOURSING வழங்கவில்லையானால் OUTSOURSED வேலைகளை
ஊழியர்கள் புறக்கணிப்போம் என்ற முடிவுக்கு தள்ளாதே !
ஞாயிறு மற்றும் பண்டிகை தினங்களில்
ஊழியர்களை பணிக்கு உத்திரவிடாதே !
MEETTING /MELA /TRAINING போடாதே !
ஊழியர் அடிப்படை உரிமையை பறிக்காதே !
24 X 7 என்று MNC COMPANY போல அடிப்படை விதிகளை மீறி
அஞ்சல் பகுதியில் 'கோமாளி' உத்திரவுகளை போடும்
அதிகாரிகளை கட்டுப்படுத்து !
CPMG யுடனான எழுத்துபூர்வமான ஒப்பந்தந்தத்தை மீறி வயதானவர்களை கட்டாய 'SHRAMDHAN' உத்திரவிடும்
PTC இயக்குனர் மீது நடவடிக்கை எடு !
தோழர். ஜெயக்குமார் சாவு போல
'இன்னொரு சாவு' ஏற்படுத்தாதே !
எழுத்தர் தேர்வு முடிவுகளை ஆண்டுக்கணக்கில்
தாமதப்படுத்தும் நிர்வாகத்தின் தூக்கத்தை கலைத்திடு !
தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிடு !
ஊழியர்களை பணிக்கு அமர்த்து !
பழுது பட்ட, காலாவதியான கணினி மற்றும்
அதன் உபபொருட்களான PRINTER , UPS, BATTERY ,
GENERATOR களை உடனே மாற்று !
லட்சக் கணக்கில் செலவு செய்து கட்டிடங்களை அழகு படுத்தாதே !
அடிப்படை கட்டுமானங்களை வழங்கு !
வேலை செய்யாத ATM களுக்கு
லட்சக்கணக்கில் தினம் தினம் கட்டிடமா ?
வேலை செய்யும் ஊழியர்களுக்கு SCANNER கூட இல்லையா ?
PRINT எடுக்க PAPER கூட இல்லையா ?
BARCODE STICKER கூட இல்லையா ?
இதற்கெல்லாம் பணம் அடியோடு இல்லவே இல்லையா ?
மூன்று ஆண்டுகளாய் தேங்கிக் கிடக்கும்
LSG பதவி உயர்வு என்னாச்சு ?
REVISED RECTT . RULES அடிப்படையில்
HSG II, HSG I பதவி உயர்வு என்னாச்சு ?
தொழிற்சங்க நடவடிக்ககளுக்காக பழிவாங்கும்
தென் மண்டல நிர்வாகத்தை கட்டுப் படுத்து !
தொழிற்சங்க நடவடிக்கைகளுக்காக சட்டத்தை மீறி
வழங்கப் பட்ட தண்டனைகளை ரத்து செய் !
சட்டத்தை குப்பையில் போடும் திண்டுக்கல்
கோட்ட அதிகாரியின் கொட்டத்தை அடக்கு !
ஊழல் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடு !
இடமாற்றம் மட்டும் செய்யாதே !
ஆள் இல்லாத நேரத்தில் ஆள் நிரப்பும்
கூடங்களாக பயிற்சி மையங்களா ?
கண்மூடித்தனமான WCTC பயிற்சிகளை உடனே நிறுத்து !
CBS அசுர வேகம் ! SANCHAY POST TRAININGம் அசுர வேகம் !
ஏன் இந்த முரண்பாடு ! தேவையற்ற SANCHAY POST TRAINING ஐ
உடனே நிறுத்து !
கணினி உபகரணங்களுக்கு AMC உடனே அறிவி !
கண்மூடித்தனமாக STAMP VENDOR பதவிகளை ஒழிக்காதே !
COUNTER இல் பணிபுரியும் ஊழியர்களை
மேலும் மேலும் கொடுமைப் படுத்தாதே !
பொது மக்கள் உபயோகத்திற்கு ரூ. 4/- ரூ. 5/
DENOMINATION STAMP உடனே வழங்கு !
CARD , COVER , ACK CARD , RPLI RECEIPT BOOK, PASS BOOK,
PAY IN SLIP , B .O .DAILY ACCOUNT உள்ளிட்ட அத்தியாவசிய
பொருட்களை உடனே வழங்கு !
மாதாந்திரப் பேட்டிகளை நடத்திடாத
கோட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடு !
மற்றும் தேங்கிக் கிடக்கும் கோட்ட அளவிலான
பிரச்சினைகளை உடனே தீர்த்து வை !
கோட்ட/ கிளைச்
செயலர்கள் கூட்டத்தில் பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை சரி செய்து MEMORANDAM
தயார் செய்யும் பணியில் மாநிலச் சங்கம் ஈடுபட்டுள்ளது . கூட்டத்திற்கு வர
இயலாத கோட்ட/ கிளைச் செயலர்கள் உடன் தங்கள் பகுதிப் பிரச்சினைகளை
மாநிலச் செயலருக்கு EMAIL மூலம் அனுப்பிட கேட்டுக் கொள்கிறோம்.
பிப்ரவரி முதல் வாரத்தில் முதற் கட்ட போராட்டம் அறிவிக்கப்படும் !
கோட்ட/ கிளைச் செயலர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டுகிறோம்.! இரண்டாவது
கட்ட போராட்டத்தில் வேலைநிறுத்த அறிவிப்பு மற்றும் சட்ட பூர்வமான
நோட்டீஸ் வழங்கப்படும் !
இது நம் உரிமை காக்கும் போராட்டம் !
நம் உணர்வுக்கான போராட்டம் !
போராட்ட உணர்வு பெருகட்டும் !
போராட்டத் தீ பரவட்டும் !
No comments:
Post a Comment