Friday, 29 May 2015

தோழர். N.S அவர்களை அகில இந்திய பொது செயலராக தேர்ந்தெடுப்போம்.

N.S. என்னும் உழைப்பாளி ! அவர் பணி சிறக்கட்டும் !

GENERAL SECRETARY, CHQதமிழகத்தை சேர்ந்த தோழர். N.S. என்னும் N. சுப்ரமணியன் அப்பழுக்கற்ற சிறந்த தொழிற்சங்க வாதி. தற்போது நம்முடைய அகில இந்திய சங்கத்தின் பொதுச் செயலாளராக பணியாற்றி வருகிறார். தம்ழகத்தின் பெயரை இந்தியா முழுவதும் நிலை நாட்டி வருகிறார். அவர் அடிமட்ட தோழர்கள் வரை எந்த வித பாகுபாடும் பார்க்காமல் பழகக் கூடியவர் .. எந்தவித அணி வித்தியாசமும் பார்க்காமல் எல்லோருடனும் இன் முகத்துடன் பழகக் கூடிய நல்ல நண்பர். எந்த கோட்டத்திலிருந்து பிரச்சினை கொடுத்தாலும் அதை எந்த வித தயக்கமும் இன்றி உடனே மேல் மட்டம் வரை எடுக்கக் கூடிய தொழிற்சங்க உணர்வுள்ள தோழர். அனைத்து தலைவர்கள் மீதும் அன்பும் மாறாத மரியாதையும் வைத்து பழகக் கூடியவர். மாபெரும் தலைவர்கள் பிரேம், NCA வுக்கு பிறகு தமிழகத்தின் தலைவர்கள் K.R., KVS போன்ற சிறப்பு மிக்க உழைப்பாளிகளுக்கு அகில இந்திய பொறுப்புகளில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது . 

அவர்கள் காலத்தில் சிறப்பாக பணியாற்றி தமிழகத்தின் பெயரை நிலை நாட்டினார்கள். அவர்களுக்குப் பிறகு தற்போது அகில இந்திய தலைமைக்கு தமிழகத்திற்கு மீண்டும் ஒரு வாய்ப்பு உருவாகியுள்ளது. நிச்சயம் தமிழகத்தின் K.R., KVS போன்ற மூத்த தலைவர்கள் அவரை தலைமைப் பொறுப்பில் அமர்த்திட முயற்சி மேற்கொள்வார்கள். நாமும் நம் பங்கிற்கு தமிழகத்திலிருந்து அவருக்கு நம்முடைய ஆதரவான ஒன்று பட்ட நிலையை எடுத்திடுவோம். இதில் NCA பேரவை, NCA எழுச்சி பாசறை , KG போஸ் அணி என்று யாரும் அணி வித்தியாசம் பார்க்காமல் நம் தமிழகத்திற்கு தற்போது கிடைக்கும் நல்ல வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வோம். நாம் அனைவரும் ஒன்றாக ஒரே குரலில் அவருக்கு நம் அன்பினை , ஆதரவினை வெளிப்படுத்திடுவோம். 
  
ஜூவலமுகியில் நடைப்பெற்ற அகில இந்திய மாநாட்டில் அண்ணன் அஞ்சாநெஞ்சன் N.பாலசுப்ரமணியன் அவர்கள் தனக்கு கிடைத்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி அன்றைய தமிழ் மாநில செயலராக இருந்த KVS அவர்களை அகில இந்திய பொது செயலராக தேர்ந்தெடுத்து அழகு பார்த்தார். 

அனால் இன்றோ அதைவிட கடந்த ஓர் வருடமாக அகில இந்திய பொது செயலராக பணியாற்றி வரும் தமிழகத்தை சேர்ந்த தோழர். N.S. என்னும் N. சுப்ரமணியன் அவர்கள் பொது செயலராக தொடர்ந்து பணியாற்றிட நாம் அனைவரும் ஒன்று திரண்டு தோழர். N.S அவர்களை அகில இந்திய பொது செயலராக தேர்ந்தெடுப்போம். அனைத்து மூத்த தலைவர்களின் ஆசியுடன் இது நிறைவேறட்டும் ! தலைவர்களை வேண்டுகிறோம் !
D.RAVI  -
செயலர் 

No comments:

Post a Comment