Saturday, 21 March 2015

போராட்ட அறிவிப்பிற்கு மாபெரும் வெற்றி !

நம்முடைய  வேலை நிறுத்த 
போராட்ட அறிவிப்பிற்கு மாபெரும் வெற்றி !

அன்புத் தோழர்களுக்கு  வணக்கம் !

நம்முடைய அஞ்சல் மூன்றின் வேலை நிறுத்த முக்கிய கோரிக்கைகளில் ஒன்றான, மண்டல மற்றும் மாநில அலுவலகத்தில்  பல கோட்டங்களில் இருந்து  நீண்ட காலம் DEPUTATION  இல் இருக்கும் ஊழியர்கள்   அந்தந்த கோட்டங்களுக்கு  திருப்பி  அனுப்பப்பட வேண்டும் என்பதே . இன்று  தொழிலாளர் நல உதவி ஆணையர் முன்னிலையில்  நடைபெற்ற CONCILIATORY  MEETING இல்  இந்தப் பிரச்சினை விவாதிக்கப்பட்டு  அதன் மீது எழுத்து பூர்வமாக  இன்று பதிவு செய்து  மாநில நிர்வாகத்திற்கு   அளிக்கப்பட்டது . 

இன்று  DEPUTATION  குறித்த கோப்புகள்  மற்றும் ஞாயிறு   பணி  குறித்த பிரச்சினைகள்     நமது  மாநிலத்திற்கு  ADDL  CHARGE  ஆக  இருக்கும் கர்நாடகா CPMG  அவர்களின்  உத்திரவுக்கு அனுப்பப்பட்டு காத்திருப்பில் இருந்தது . ஏனெனில்  அங்கு வருகை புரிந்த  அஞ்சல் வாரிய  உறுப்பினர் அவர்களுடன்  CPMG  CAMP  இல் இருந்ததால்  அதன் மீது முடிவு எடுக்கப் படவில்லை . பிறகு  மாலை 07.00 மணியளவில் முடிவு எடுக்கப்பட்டு  இரவே உத்திரவு அனைத்து  மண்டலங்களுக்கும் அனுப்பப்பட்டது.  

அதன் படி  புதிதாக  பணியில் சேர்ந்த   PA COக்கள் அனைவரும்  பணி  பயிற்சி முடித்து  பணியில் அமர்ந்த உடன் (APRIL  மூன்றாவது வாரத்தில் ) ஏற்கனவே  CIRCLE  OFFICE  மற்றும்  நான்கு மண்டலங்களிலும்  உள்ள  மண்டல அலுவலகங்களில்  நீண்ட காலமாக DEPUTATION  இல் இருக்கும் ஊழியர்கள்  திருப்பி அனுப்பப் படவேண்டும் .  இந்த செய்தி  மாநில நிர்வாகத்தில் இருந்து  நமக்கு  தெரிவிக்கப்பட்டது  . இதற்கான உத்திரவின் நகல்  நமது  சங்கத்திற்கு  நாளை  அனுப்பப் படும்   என்றும்  தெரிவிக்கப்பட்டது. .

இந்தப் பிரச்சினை  15 ஆண்டுகளுக்கும் மேலாக நம்முடைய மாநிலத்தில்  தீர்க்கப்படாமல்  நிலுவையில் இருந்த  பிரச்சினை ஆகும் . பல ஊழியர்கள்  15 ஆண்டுகளுக்கும் மேலாக  DEPUTATION  இல் உள்ளார்கள் என்பதே  இதற்கு ஆதாரம் . இந்த  முடிவு  நம் அனைவரின்  போராட்ட வீச்சிற்கு கிடைத்த வெற்றி என்றாலும்,  இப்படி ஒரு முடிவை   எடுத்த   CPMG  திரு. M .S . ராமானுஜன் , IPoS  அவர்களுக்கு  நம் நன்றியை  தெரிவித்துக் கொள்கிறோம்.

 இந்த ஒட்டு மொத்த உத்திரவின் மூலம்  நம்முடைய  தோழர். S . சுந்தரமூர்த்தி  அவர்களின்  உண்ணா விரதக் கோரிக்கையும்  மதுரை கோட்டத்திற்கு  நிறைவேற்றப்பட்டது  என்பதை மகிழ்வுடன்  தெரிவித்துக் கொள்கிறோம்.  அவரும்  தன்னுடைய உண்ணா நிலை போராட்டத்தை  இன்று முடித்துக் கொண்டார்.  அவரது  போராட்டத்திற்கு  நம்முடைய மாநிலச் சங்கத்தின் வீர வாழ்த்துக்கள் ! இதர கோரிக்கைகளை வென்றடைய  நாம் போராட்ட வீச்சை அதிகப் படுத்துவோம். 
ஊழியர் ஒற்றுமை  ஓங்குக !  
வேலை நிறுத்தம் வெல்லட்டும் !

No comments:

Post a Comment